M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

4 months ago 8
ARTICLE AD

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் தினந்தோறும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில்,தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக தவெகவிற்கு ஆதரவளிக்கும் வகையில்,  அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல்,எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா,அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று காலை கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தார்.

யார் இந்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

இந்த நிலையில் யார் இந்த எம்ஆர் விஜயபாஸ்கர் என்பதை பார்ப்போம். தனது இளம் வயது முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தார். தாந்தோணிமலை அதிமுக ஒன்றியச் செயலாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், 2015ஆம் ஆண்டு கரூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பதவியை வகித்து வந்தார். மேலும் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியத்தை 441 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

போக்குவரத்து துறை அமைச்சராக விஜயபாஸ்கர்

இதனையடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரை போக்குவரத்து துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். அப்போது போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அசத்தியிருந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தொகுதிக்கு சென்ற நிலையில், திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் எம்எல்ஏவாக தேர்வானார்.

இந்த நிலையில், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தவெக ஆட்சிக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்திருந்தார். இதனால் கரூர் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் புதிய மாவட்ட செயலாளரையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனையடுத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக சென்ற நிலையிலும் மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்காத காரணத்தால் தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான புகார்கள்

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரது சகோதரர் சேகர், உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மிரட்டல், கடத்தல், தாக்குதல், ஆவண மோசடி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எம்ஆர் விஜயபாஸ்கர் திமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் (2016-2021) வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக  லஞ்ச ஒழிப்பு போலீசர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Read Entire Article