Lucky Bhaskar: "நானே அஜித் ரசிகன்தான்.. அவரு மாதிரி யாரும் வர முடியாது" துல்கர் சல்மான் ஓபன் டாக்

1 year ago 7
ARTICLE AD

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் மகனாகிய இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

லக்கி பாஸ்கர்:

இந்த நிலையில், வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துல்கர் சல்மானிடம் நிருபர், தமிழ்நாட்டில் உங்களுக்கு பெண் ரசிகைகளே அதிகம். ஆண் ரசிகர்கள் குறைவு. இந்த படத்தில் பணம் பறப்பது போன்ற காட்சிகள் வருகிறது. மங்காத்தா அஜித் பாணியில் ஆண் ரசிகர்களை இழுக்க முடிவு செய்து விட்டீர்களா? என்று கேட்டார்.

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன்:

அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், “நான் அஜித்சாரின் மிகப்பெரிய ரசிகன். படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி கூட அஜித்சாரின் மிகப்பெரிய ரசிகர். அவரின் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஆசை அஜித்சாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே ஆகும். இது ஒன்றும் ப்ளான் பண்ணி பண்ண முடியாது. அனைத்து படமுமே ஒரு வாய்ப்பு. அஜித் சாரை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மாதிரி யாரும் மாற முடியாது. என்னால முடியாது. அவர் அப்படியே அஜித் சாரா இருக்கனும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

பொருளாதார குற்றத் திரைப்படம்:

நேரடி தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஒரு சாதாரண குடும்பத் தலைவன் பொருளாதார நெருக்கடியால் செய்யும் காரியங்களை அடிப்படையாக கொண்டு கிளாசிக் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு பேரனாக நடித்த ரித்விக் துல்கர் சல்மானின் மகனாக நடிக்கிறார். ராம்கி, ஹைப்பர் ஆதி, சாய்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சீதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆஃப் கோதா படம் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில், இந்த படத்தின் வெற்றியை அவர் எதிர்பார்த்து உள்ளார்.  மேலும், காந்தா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Read Entire Article