உத்தரபிரதேசத்தில் அதிவேகமாக அதிவேகமாக வந்த ஒரு SUV கார் ஒன்று ஸ்கூட்டியை இடித்து பல கிலோமீட்ர் இழுத்துச்சென்ற பரப்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது

லக்னோவில் உள்ள லுலு மால் அருகே இந்த கொடூரமான சம்பவம் நடந்ததுள்ளது, இதை ஒரு மற்றோரு வாகனத்தில் வந்த பயணி தனது ஸ்மார்ட்போனில் படம் பிடித்தார்.

லக்னோவின் மிக முக்கியமான நெடுஞ்சாலையில் சகோதரன் சகோதரி என இருவர் தங்களது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த எஸ்யூவி வாகனம் அவர்களின் வண்டியின் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் காரணமாக, ஸ்கூட்டி SUV யின் அடியில் சிக்கிய ஸ்கூட்டி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது, கார் மோதியவுடன் இரண்டு உடன்பிறந்தவர்களும் தங்கள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

#WATCH | Terrifying accident in Lucknow! A speeding car rammed into a scooter, throwing the riders off, while the scooter got stuck and was dragged for kilometers. Sparks flew as the vehicle sped ahead, leaving behind a horrific scene.#Lucknow #accident #ABPLive pic.twitter.com/7CT71VzPJv

— ABP LIVE (@abplive) March 25, 2025

நேரில் கண்ட சாட்சி ஒருவர் படம்பிடித்த வீடியோவில், SUV வேகமாகச் செல்வதையும், வாகனத்திலிருந்து தீப்பொறிகள் பறப்பதையும் படம் பிடித்தார். உடனடியாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காரின் அடியில் ஸ்கூட்டி சிக்கிக்கொண்ட போதிலும், கார் ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, விமர்சனங்களை எழுந்துள்ளது.

இந்த சம்பவம் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் நடந்தது, மேலும் இது குறித்து லக்னோ காவல்துறை விசாரணையைத் தொடங்கியது, எஸ்யூவி உரிமையாளரான பொறியாளர் பிரிஜேஷ் சிங் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தின் வருகின்றனர்.