LPG Cylinder Price Hike: சிலிண்டர் விலை தாறுமாறு உயர்வு; விலையை ஏத்தப்போகும் ஹோட்டல், டீக்கடைகள் - மக்களுக்குத்தான் கஷ்டம்!

1 month ago 7
ARTICLE AD

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பல நாடுகள் நாளுக்கு நாள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த போர் காரணமாக பல நாடுகளில் பொருளாதார நிலைமை மோசம் அடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு:

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் பாண்டிச்சேரியில் சட்டமன்ற தேர்தல் முடிந்த சூழலில், நேற்று வணிக சிலிண்டரின் விலையை சுமார் 1000 வரை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கான எரிபொருள் வளைகுடா நாடுகளில் இருந்தே பெருவாரியாக இறக்குமதி செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த போர் தொடங்கியது முதலே எரிபொருட்களை கொண்டு வருவதில் பெரும் சவால் இந்தியாவிற்கு நிலவி வருகிறது. ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது உலக நாடுகளுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கி வருகிறது. இந்த நீரிணை திறக்கப்படுவதும், மூடப்படுவதும் என தொடர்கதையாகி வரும் சூழலில், போரும் முடிவுக்கு வருவதற்கான சூழலும் எழவில்லை.

விலை உயரும் அபாயம்:

இந்த சூழலில், மத்திய அரசு ஹோட்டல்களுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை ரூபாய் 3 ஆயிரத்து 239 ஆக உயர்த்தியிருப்பதால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் உருவாக உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பே சிலிண்டர் தட்டுப்பாடு என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகளில் சாப்பாடு, தேநீர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருந்தனர்.

பொதுமக்கள் அவதி:

தற்போது, வணிக சிலிண்டரின் விலையை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தியிருப்பதால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரு நகரங்களில் வேலை மற்றும் படிப்பிற்காக தங்கியிருக்கும் இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் அவலம் உருவாகியுள்ளது.

மேலும், சிலிண்டரின் விலை மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருப்பதால் பல சிறிய அளவிலான உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி பல இடங்களிலும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை விற்பனை செய்யவும் சிலர் முயற்சித்து வருகின்றனர்.

அனைவருக்கும் பாதிப்பு:

சிறு வணிகர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் இந்த சிலிண்டர் விலை உயர்வு மிக கடுமையாக பாதித்துள்ளது. ஊதிய உயர்வு ஏதும் இல்லாமல் பொதுமக்கள் விலை வாசி உயர்வை மட்டுமே கடந்த சில மாதங்களாகவே எதிர்கொள்ளும் அபாயம் உருவாகி வருகிறது.
சிலிண்டர் விலை, பெட்ரோல் - டீசல் விலை உயரும்போது பொருட்களின் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் விலை குறையும்போது விலைவாசியை குறைக்காததையும் வாடிக்கையாக வைத்து மக்களை வதைத்து வருகின்றனர்.

எப்போது முடிவுக்கு வரும்?

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் சூழலில், அமெரிக்கா - ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சிலிண்டர் விலையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரவும் உலக நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மக்களால் அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

Petrol Diesel Price Hike: மக்களே ரெடியா இருங்க.! ஒரு வாரத்தில் இடி இறங்கப் போகுது.! பெட்ரோல், டீசல் விலை உயர்வா.? எவ்வளவு.?

Read Entire Article