முதல்வர் விஜய் கரூர் செல்வதை தடுக்கலாம் என முயற்சி செய்த திமுகவுக்கு சரியான தர்ம அடி விழுந்திருப்பதாக தவெக கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.

கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராக உள்ள விஜய், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெகவுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விஜய் வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவித்தார். ஆனால் கரூர் பக்கம் அவர் செல்லவில்லை.

இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்தது. இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் ஜூலை 10ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியான 41 பேர் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக தொடுத்த வழக்கு - நீதிபதிகள் குட்டு

முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தவெகவினர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூடாது என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், விஜயை குற்றவாளி என சொன்னதால் நீதிபதிகள் அதிருப்தியடைந்தனர். மேலும் வழக்கை தாங்களே தள்ளுபடி செய்வோம் என சொன்ன நிலையில் திமுக முன்வந்து வாபஸ் பெற்றுக் கொண்டது.

அதேபோல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சரின் நடவடிக்கைகள் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால் அவர் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற மனுவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also Read: SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக

வெளுத்து வாங்கிய லயோலா மணி

இந்த நிலையில் திமுக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்வதை தடுத்து விடலாம் என்று முயற்சி செய்த திமுகவிற்கு சரியான நெத்தியடி உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் செய்ய நினைத்த தீய சக்தி திமுகவின் செயல் அம்பலப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நினைக்கும் முதல்வரை கரூர் செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்த மனிதாபிமானமற்ற இழி பிறவிகளின் செயலுக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

மாண்புமிகு முதல்வரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வாதிட்டது திமுகவின் பச்சை அயோக்கியத்தனம். சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் ஆனார்களா? என்று யோசிக்க தோன்றுகிறது. FIR ல் பெயரே இல்லாதவர்களை குற்றவாளி என்று சொல்வது நீதிமன்றத்தில் அரசியல் செய்ய நினைத்த மோசமான மனநிலைக்கு விழுந்த தர்ம அடி. திமுகவின் கொடூர மனநிலையை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். வீழ்ந்த திமுக இனி ஒருபோதும் மேலே வராது. அடுத்த தேர்தலில் 10 % வாக்கு வாங்கினாலே சாதனைதான் என லயோலா மணி தெரிவித்துள்ளார்.