2025ம் ஆண்டு நிறைவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் மிகப்பெரிய சோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு தொடங்கி டெல்லி வரை அப்படியாக நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

மஹா கும்பமேளா: உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நதிக்கரையில் மஹா கும்பமேளா 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் தை அமாவாசை ஜனவரி 29ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட அங்கு வருகை தந்த பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

தீ விபத்து வதந்தி: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் ஜனவரி 22ம் தேதி லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அதில் பயணித்த பயணிகள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்தனர். அப்போது அருகிலுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் ஏழு பேர் புலம்பெயர்ந்த நேபாள தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டது.

டெல்லி ரயில் நிலைய நெரிசல்: மகா கும்பமேளா நடைபெற்று வரும் பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏற காத்திருந்த பயணிகள் கூட்டத்தால் டெல்லி ரயில் நிலையம் திணறி வந்தது. இப்படியான நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், இலேசான காயமடைந்த மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கொடுக்கப்பட்டது.

பட்டாசு ஆலை விபத்து: குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோதமாக பட்டாசுகளை சேமித்து தயாரித்ததாகக் கூறப்படும் ஒரு குடோனில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தி 21 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மற்றும் தேவாஸ் மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமி ஏப்ரல் 22ம் தேதி பொதுமக்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதாக இது பதிவானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் அமைவிடங்களை அழித்தது. இதில் பலர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கொடிய தீ விபத்து: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சார்மினாரில் மே 18 ஆம் தேதி காலை 6 மணியளவில் நூற்றாண்டு பழமையான வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் 8 குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத் நிஜாம் கால கட்டடக்கலையில் கட்டப்பட்ட அந்த வீட்டில் பால்கனி உள்ளிட்ட தப்பிக்க வழிகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஆர்சிபி கொண்டாட்டம்: ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகாலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ரசிகர்களுக்கு கிடைத்த ஏக்கத்திற்கு முடிவு கிடைத்தது. அந்த அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. எனினும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிவடைந்தது. முன்னேற்பாடுகள் சரியாக இல்லாததால் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி லண்டன் கேட்விக் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. ஒரு மருத்துவ விடுதி வளாகத்தில் மோதி தீப்பிடித்த நிலையில் அதில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். அவசர பாதை அருகே பயணம் செய்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மருத்துவ மாணவர் விடுதியைச் சேர்ந்த 19 பேரும் பலியாகினர்.

பாலம் விபத்து: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் 40 ஆண்டுகாலமாக உள்ள பழமையான கம்பிரா பாலத்தின் ஒரு பகுதி ஜூலை 9ம் தேதி அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதனால் மஹிசாகர் ஆற்றில் வாகனங்கள் விழுந்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

கரூர் சோக சம்பவம்: செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மதியம் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் இரவு 7 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். அவர் பேசி முடிக்கும் சமயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் என 41 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.