அதிமுகவில் இணைந்த ஒரு மாதத்தில் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் இந்த வாய்ப்பை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் கட்சியில் இணைந்த உடனேயே அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது லால்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த லீமா ரோஸ்?

லாட்டரி அதிபர் ஜோஸ் மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் ஆவார். இவர் இந்திய ஜனநாயகக் கட்சியின் இணைப்பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இவர் சுமார் 14 ஆண்டுகளாக ஐஜேகே கட்சியில் இருந்தார்.

எனினும் கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றுகூறி அண்மையில் அங்கிருந்து விலகினார். தொடர்ந்து பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

மார்ட்டின் அறக்கட்டளை அறங்காவலர்

அரசியல் வாழ்க்கை தவிர்த்து, பொது வாழ்க்கையில் லீமா ரோஸ், மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக உள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ள லீமா ரோஸ், மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் தாளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் 3 கட்சிகள்

இவரின் மகள்தான் டெய்ஸி மார்ட்டின். இவர் தவெக தேர்தல் வியூக் மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனாவை மணந்துள்ளார். அதாவது ஆதவ் அர்ஜூனாவிம் மாமியார் லீமா ரோஸ் ஆவார்.

லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயகக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கி, புதுச்சேரியில் நடத்தி வருகிறார்.

லால்குடி தொகுதி எப்படி?

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் லால்குடி தொகுதி, திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் செளந்தர பாண்டியன் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.