<p>தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு (மே 12) இன்று தொடங்கி உள்ளது.</p>
<p>பிஏ எல்எல்பி (B.A.LL.B.(Hons.) ), பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய ஹானர்ஸ் படிப்புகளில் சேர முடியும். மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.</p>