Kuthambakkam bus terminus Latest News: "சென்னையின் மற்ற இடங்களுக்கு குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, ஜூன் மாதம் முதல் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன".

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் (Kuthambakkam Moffusil Bus Terminal)

சென்னையில் தொடர்ந்து இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி அருகே, குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில், சுமார் 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Chennai corporation: EV சார்ஜ் காலியா? கவலை வேண்டாம், இனி ஒவ்வொரு ஏரியாவிலும் பொது ஸ்டேஷன் - சென்னை மாநாகராட்சி

என்னென்ன வசதிகள் உள்ளது ? Key Features Of Kuthambakkam Bus Stand

மாநகரப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழிகள் இந்த பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன.

41 கடைகள், 8 டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

2000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள், வாகன நிறுத்தும் இடத்தில் செய்யப்பட உள்ளன.

70 வெளியூர் அரசு பேருந்துகளும், 30 ஆம்னி பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும். மேலும், பணிமனையில் 36 மாநகர பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான இட வசதிகள் உள்ளன.

மாநிலத்திலே முதல்முறையாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியும் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? kuthambakkam Bus Stand Open

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமான முடிவடைந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருவான்மியூர் டு உத்தண்டி இனி 10 நிமிஷம் தான்.. ECR-யை மாற்ற போகும் 16Km உயர்மட்ட பாலம்..

ஜூன் மாதம் முதல்..

இங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களுக்கு இணைக்கும் வகையில், மாநகரப் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வழித்தட பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில், முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் வழிதடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, அண்ணா சதுக்கம், கிண்டி, கோவளம், கோயம்பேடு, கிளாம்பாக்கம்,தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூன் மாதம் முதல் 100 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.