இந்தியாவில் இளைஞர்களை குறிவைத்து இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இரு சக்கர வாகனங்களில் மிகவும் முக்கியமான நிறுவனம் KTM. இவர்களின் பைக்குகளுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இளைஞர்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் இரு சக்கர வாகனம் Duke.

புதிய New KTM 200:

இவர்களின் Duke பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட New KTM 200 Duke பைக் அறிமுகமாகியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கில் 199.5 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரத்து 140 ஆகும். இதன் பழைய வேரியண்டைக் காட்டிலும் இதன் விலை தற்போது ரூபாய் 1,552 அதிகமாக விற்கப்படுகிறது.

சிறப்புகள்:

இந்த பைக்கில் ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் மோட் உள்ளது. சூழலுக்கு ஏற்ப ட்ரைவ் மோட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய KTM 200 பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வசதி உள்ளது. 24.5 பிஎச்பி ஆற்றல் கொண்டது. இது நெடுஞ்சாலைகளில் நல்ல ஆற்றலை இந்த பைக்கிற்கு வழங்கும்.

இதில் 19.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கியர் கீழேவும், மற்ற 5 கியர் மேலேவும் பொருத்தப்படுகிறது. முன்பக்கம் அப்சைட் டவுன் ஃபோர்க் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

ட்யூபலர் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டுள்ளது. எடை குறைவான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய KTM 200 பைக் லி்க்யூட் கார்ப் மற்றும் சாம்பல் வண்ணங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வேரியண்டைக் காட்டிலும் இந்த புதிய KTM 200 பைக்கின் சிறப்புகளாக கருதப்படுவது ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி, ரைட் மோட்கள், புதிய வண்ணங்கள், க்யூக் ஷிப்டர் ஆகியவை ஆகும். இதனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள KTM 200 பைக்கின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சிறப்புகள்:

இந்த பைக்கின் எடை 159 கிலோ ஆகும். அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஆன்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 469 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது.

சூப்பர்மோடோ ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 815 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 13.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடங்கள் வாரண்டி அளிக்கப்படுகிறது.

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் ஆகும். கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.