இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் கிருஷ்ணா. இதன் பின்னர் இருவர், தி டெரரிஸ்ட், உதயா போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அலிபாபா திரைப்படத்தின் மூலம் 2008-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான கிருஷ்ணா முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டார்.

இதை தொடர்ந்து, 'கழுகு', 'கற்றது களவு', 'யாமிருக்க பயமே' , 'யட்சன்', 'யாக்கை' போன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது வரை முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க, தொடர்ந்து போராடி வரும் கிருஷ்ணா, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணா கடந்த 2014-ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரமாண்டமாக மேட்டுப்பாளையத்தில் நடந்த நிலையில், திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் கிருஷ்ணா மனைவோடு வடபழனியில் வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில்... இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக இருவரும் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற முடிவெடுத்தனர். மனைவி தன்னுடைய கடமையை செய்ய தவறியதோடு, தன்னை சந்தேகப்பட்டு நடிக்க விடாமல் டார்ச்சர் செய்ததாக கிருஷ்ணா கூறி இருந்தார். அவர் தன் சக்திக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை படுவதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தன்னை பலமுறை தாக்கி தனக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து கிருஷ்ணா மற்றும் ஹேமலதா இருவரும் 2016-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது. விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கிருஷ்ணா, பிரபல நடிகையை காதலிப்பதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன் கிசுகிசு எழுந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என கிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கிருஷ்ணா விவாகரத்து பெற்று 9 ஆண்டுகளுக்கு பின்னர், தன்னுடைய 47 வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதனை புகைப்படம் வெளியிட்டு கிருஷ்ணா சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தாலும் மணமகள் யார்? என்பது பற்றி ரிவீல் செய்யவில்லை. இதுவும் காதல் திருமணம் என்றே கூறப்படும் நிலையில், கிருஷ்ணா திருமணம் செய்து கொண்ட காதலி திரைத்துறையை சேர்ந்தவரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். கிருஷ்ணாவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், கோவிலில் நடந்துள்ளதால்... இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.