கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கொண்டாட அனைவரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் அந்நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றிக் காணலாம்.

2026 கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

2026ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வரும் செப்டம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. மதுரா நகரில் உள்ள சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ந்தார். கிருஷ்ணர் போல குறும்பு செய்பவர் கிடையாது என்னும் அளவுக்கு சேட்டைகள் செய்தார். கிருஷ்ணர் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் நள்ளிரவில் பிறந்தார். இதனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகர் களைக்கட்டியுள்ளது.

இந்த பண்டிகை கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், வெண்ணெய் தின்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகுப்படுத்துவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வாஸ்து விதிகள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் கிருஷ்ணரின் சிலை அல்லது புகைப்படம் வாங்கி வழிபடுவது வழக்கம். அப்படி வாங்க நினைப்பவர்கள் பசு மற்றும் கன்றுடன் கூடிய கிருஷ்ணர் சிலையை வாங்குவது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இது நம் வீட்டில் நிலவும் வாஸ்து குறைகளை நீக்கி குழந்தை பாக்கியம், மகிழ்ச்சியான இல்வாழ்க்கை போன்றவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதே நாளில் அஷ்டதாது என அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு, பாதரசம் போன்ற எட்டு உலோகங்கள் கலந்த கலவையிலான கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் நாள்கண்ட நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைத்து மன நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதீகமாகும்.

கிருஷ்ணருக்கு மிகவும் உகந்த வைஜெயந்தி மாலை மாலையை வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் கிருஷ்ணருக்கு சமர்பித்தால் நிதி பிரச்னைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உருவாகும் என சொல்லப்படுகிறது. கிருஷ்ணாஷ்டமி பூஜை வழிபாட்டில் சங்கை வைத்து வழிபடுவது, அதில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி அபிஷேகம் செய்வது, திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட திருமண வாழ்வில் உள்ள பிரச்னைகளை நீக்கும் என நம்பப்படுகிறது.

கிருஷ்ணரின் தொட்டில் பூஜை வழிபாட்டில் இடம்பெறும். இதனை வெள்ளி அல்லது தங்கத்தால் வைத்திருப்பார்கள். இதனை பூஜை செய்வதற்கு முன் வண்ண மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையில் கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் அதிர்ஷ்டமானதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் சிலையை கிழக்கு திசையில் வைத்து வழிபட்டால் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும் என நம்பப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின்போது அவருக்கு பிடித்த புல்லாங்குழல், மயில் இறகுகள், பசுக்கள் பொம்மைகள் போன்றவை வைக்கப்பட வேண்டும்.