Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்

1 month ago 5
ARTICLE AD

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியராக கைலயரசன் மற்றும் தீபா பாலு நடித்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு, காட்டுப்பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு கைலயரசன் செல்கிறார். கோயிலுக்குச் செல்லும் பாதையில் பல சிரமங்களையும் தடைகளையும் கடந்து அவர்கள் பூஜையை நிறைவு செய்கிறார்கள். ஆனால் திரும்பும் வழியில் திடீரென மர்ம கும்பல் ஒன்று அவர்களை கொடூரமாக தாக்குகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? கைலயரசன்–தீபா பாலு தம்பதியின் பின்னணி என்ன? அவர்களை கொலை செய்ய முயன்றவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதையாக விரிகிறது.

த்ரில்லர் படமாக உருவாகியுள்ள கொலைச்சேவல் அதற்கு நேர் மாறான திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. நாயகன் கலையரசன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்லும் காட்சிகள் மிக நிதானமாகவும் சினிமாத்தனங்கள் அதிகமில்லாமல் மிக எதார்த்தமான வகையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் 70  நிமிடங்களுக்கு எதார்த்தமான ஒரு ஃபேமிலி டிராமாவாக செல்லும் கொலைச்சேவல் படம் கடைசி 20 மணி நேரம் ஆணவப்படுகொலை என்கிற முக்கியமான சமூக பிரச்சனையை பேசுகிறது. இரண்டாம் பாதியில் படம் மிக சுவாரஸ்யமான கட்டத்தின் ஃபிளாஷ்பேக் செல்வது சிறு தொய்வை ஏற்படுத்துகிறது .  ஆனால் எதிர்பார்ப்புகளை மீறி க்ளைமேக்ஸ் காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு மிரட்சியான அனுபவத்தை வழங்குகிறது

கணவன் மனைவியாக கலையரசன் மற்றும் தீபா பாலு மிக இயல்பாக கதாபாத்திரங்களில் பொருந்தி போயிருக்கிறார்கள். முதல் பாதி பெரும்பாலும் இருவரது நடிப்பு பெரும் பலமாக இருக்கிறது. பால சரவணனின் நகைச்சுவைகள் இயல்பாக கதையோடு ஒன்றியிருக்கின்றன. ஜவ்வாது மலையை ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா மிக சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.

Read Entire Article