ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார். அதில், ஆர்சிபி அணிக்கு வரப் போகிறீர்களா? என கேட்க, அதற்கு பதில் அளித்த கே.எல்.ராகுல், ‘நம்புவோம்’ என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025:

ஐபிஎல் சீசன் 17-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா மைதானத்தில் வைத்தே திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. பின்னர் கே.எல்.ராகுலை தனியாக சந்தித்து சமாதானப்படுத்தினார் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா.

சஞ்சீவ் கோயங்காவின் செயல் காரணமாக கே.எல்.ராகுல் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், ஐபிஎல் 18ஆவது சீசனில் அவர் வேறு அணிக்கு விளையாட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் பேட்டி ஒன்று அளித்தார். அதில், அணி உரிமையாளர்கள், பிசினஸ் பேக்ரௌண்டில் இருந்து வந்தவர்கள். அணிகள் இப்படிதான் விளையாட வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால், அவர்கள் நினைப்பதுபோல் நடக்க, இது பிசினஸ் கிடையாது.

ஏற்ற, இறக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும்.எந்த ஒரு கிரிக்கெட் வீரராலும் தொடர்ந்து அதிரடி காட்ட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் ஏற்ற, இறக்கம் இருக்கும். ஒரு வருடம் சிறப்பாக விளையாடுவார், அடுத்த வருடம் மோசமாக ஆடுவார். ஒவ்வொரு போட்டியிலும் மாற்றம் இருக்கும்" என்று கூறி இருந்தார்.

வைரல் வீடியோ:

I'm happy that KL Rahul knows about the rumours that are going around for him & RCB.

Please boss change your IPL team! 🙏❤️ pic.twitter.com/Os06Uj39gQ

— Kunal Yadav (@Kunal_KLR) September 14, 2024

இச்சூழலில் தான் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார். அதில், ஆர்சிபி அணிக்கு வரப் போகிறீர்களா? என கேட்க, அதற்கு பதில் அளித்த கே.எல்.ராகுல், ‘நம்புவோம்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கே.எல்.ஆர்சிபிக்கு விளையாடவே விரும்புவதாக கருதப்படுகிறது. இதற்குமுன், 2013 முதல் 2016ஆம் ஆண்டுவரை கே.எல்.ராகுல் ஆர்சிபி அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.