KKR vs LSG:இறுதிவரை போராடிய கொல்கத்தா! விறுவிறுப்பான ஆட்டம்! லக்னோ அணி அசத்தல் வெற்றி!

8 months ago 5
ARTICLE AD

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கொல்கத்தா - லக்னோ போட்டி

இந்தத் தொடரின் 21-வது லீக் பட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.  ரிஷப் பண்ட்  தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை அணியை அஜிங்கியா ரெகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி அதிரடி காட்டியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எய்டன் மார்க்கரம், மிட்சல் மார்ஷ் இருவரும் பவர்ப்ளேயில் நன்றாக அடித்து விளையாடியனர். பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்ன்றும் லக்னோ பேட்ஸ்மென்கள் அதிரடியான ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை. லக்னோ அணி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்ஷித் ராணா பந்தில் மார்க்ரம் போல்ட் ஆனார். இவர் 28 பந்துகளுக்கு 4 பவுண்ட்ரி, 2 சிக்ஸர் உடன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ், ஆன்ரே ரசல் பவுலிங்கில் 81 ரன்களில் அவுட்டானார். இவர் 6 பவுண்ட்ரிகள், 5 சிக்ஸர் அடித்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய அப்துல் சமத் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன், 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர் 8 சிக்ஸர், 7 பவுண்ட்ரிகள் அடித்தார். 36 பந்துகளுக்கு 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு  238 ரன்கள் எடுத்தது.இலக்கை எட்டுமா என்று பார்க்கலாம்.

Read Entire Article