Kia: இனி எலக்ட்ரிக் காரும் மலிவான விலையில்; கியா புது மாடல் அறிமுகம்- எப்படி சாத்தியம்?

3 weeks ago 4
ARTICLE AD

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியா, பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் என்னும் புதிய திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் காரின் விலை கணிசமாக குறையும்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட இவற்றின் விலை அதிகமாக இருப்பதால், பல வாடிக்கையாளர்கள் இதனை வாங்கத் தயங்குகின்றனர். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்போது 'பேட்டரி ஆஸ் எ சர்வீஸ்' என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தி வருகின்றன.

சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது விண்ட்சர் இ.வி. கார் மூலம் இந்த 'BaaS' திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவும் இதே திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

BaaS மாடல் என்றால் என்ன?

சாதாரண எலக்ட்ரிக் கார்களில் பேட்டரியின் விலை மிக அதிகமாக இருக்கும். இது காரின் மொத்த விலையில் 30 முதல் 40 சதவீதப் பங்கை வகிக்கிறது. ஆனால், இந்த பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் காரை வாங்கும் போது பேட்டரிக்கான தொகையைச் செலுத்த வேண்டியதில்லை. காரின் அடிப்படை விலையை (உடல்/ ஷெல்) மட்டும் கொடுத்தால் போதுமானது. பேட்டரியை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக, வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணிக்கும் தூரத்திற்கு (கிலோமீட்டர் கணக்கில்) ஏற்ப வாடகைக் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, எம்.ஜி. நிறுவனம் தனது பேட்டரி வாடகைக்காக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.5 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. இதேபோன்றதொரு நடைமுறையைக் கியா நிறுவனமும் பின்பற்ற வாய்ப்புள்ளது.

பெட்ரோல் கார்களை விட விலை குறைவு

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பேட்டரியின் விலை கழிக்கப்படுவதால் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை பெருமளவு குறைகிறது. இதனால் ஒரு எலெக்ட்ரிக் காரின் விலை, அதே வசதிகளைக் கொண்ட பெட்ரோல் அல்லது டீசல் காரின் விலைக்கு நிகராகவோ அல்லது அதைவிடக் குறைவாகவோ மாறிவிடுகிறது.

வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த செலவில் கார்களை வழங்குவதற்காக, கியா நிறுவனம் இந்த BaaS மாடலை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கியா நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article