Kia Seltos Hybrid: செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன் தயார்..! e-AWD அம்சம், லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் - முழு விவரங்கள் இதோ

1 week ago 2
ARTICLE AD

Kia Seltos Hybrid: கியா செல்டோஸ் கார் மாடலின் ஹைப்ரிட் எடிஷன் நடப்பாண்டின் இறுதியில் அமெரிக்காவிலும், அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

கியா செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன்

கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற நியூயார்க் சர்வதேச ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில், தனது செல்டோஸ் ஹைப்ரிட் கார் மாடலை கியா அறிமுகப்படுத்தியது. நடப்பாண்டின் இறுதியில் தனது புதிய ஹைப்ரிட் எஸ்யுவியை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர தென்கொரிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே இந்திய சந்தையிலும் செல்டோஸ் ஹைப்ரிட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் கார் மாடலானது கடந்த ஜனவரி மாதம் உள்ளூர் சந்தையில் விற்பனைக்கு வந்தது. 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 19 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரையிலான விலை வரம்பில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் எடிஷன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை கூடுதல் வாடிக்கையாளர்களிடையே கொண்டு சென்று சேர்க்கும் வகையில், ஹைப்ரிட் எடிஷன் தயாராகி வருகிறது.

செல்டோஸ் ஹைப்ரிட் - இன்ஜின் விவரங்கள்

கியா செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷனில் 1.6 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினின் திறனை மேம்படுத்தும் விதமாக முன்புற ஆக்சிலில் மின்சார மோட்டார் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. கியாவின் ஹைப்ரிட் மாடல்களில் முதல்முறையாக, மின்சார ஆல் வீல் ட்ரைவ் அம்சமும் வழங்கப்பட உள்ளது. இந்த கட்டமைப்பானது ரியர் ஆக்சிலில் ஒரு மின்சார கொண்டு, தேவைக்கேற்ப ஆல்-வீல் ட்ரைவ் திறனை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக க்ரிப் குறைவாக உள்ள சாலைகளில் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

செல்டோஸ் ஹைப்ரிட் - தென்கொரிய சந்தையில் எப்படி?

கியா நிறுவனமானது ஏற்கனவே தென்கொரியாவில் செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷனை விற்பனை செய்து வருகிறது. ஆனால், அங்கு ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ட்ரெயினில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் இன்ஜின் ஆனது 104hp குதிரைத்திறன் மற்றும் 144Nm டார்க்கையும், முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரானது 43hp மற்றும் 170Nm ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஹைப்ரிட் எடிஷனானது 139hp குதிரைத்திறன் மற்றும் 265Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த ஹைப்ரிட் அமைப்பு அப்படியே அமெரிக்க சந்தையிலும் தொடர அதிகப்படியான வாய்ப்புள்ளது. அதே வழியில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.

செல்டோஸ் ஹைப்ரிட் - மைலேஜ் விவரங்கள்

வழக்கமான செல்டோஸ் கார் மாடலில் 50 லிட்டர் கொள்ளளவிற்கான எரிபொருள் டேங்க் உள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள இன்ஜினை பொறுத்து ஹைப்ரிட் எடிஷனில் இது 38 லிட்டராக மாறக்கூடும். தென்கொரியாவில் ஒரு லிட்டருக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதிகப்படியான மைலேஜ் மட்டுமின்றி, வாகனம் டூ லோட் சார்ஜ் செய்யும் திறனும் உள்ளது. வெளியில் பயணத்தின்போதும் அல்லது மின்வெட்டின் போதும் வெளிப்புற சாதனங்களுக்கு மின்சாரம் வழங்க, ஒரு சாதாரண 16 A வீட்டு சாக்கெட்டுக்கு இணையான 220 V-இல் 3.52 kW வரை பயனர்கள் மின்சாரம் பெற முடியும்.

செல்டோஸ் ஹைப்ரிட் - இந்தியாவிற்கு எப்படி இருக்கும்?

இந்திய சந்தையில் ஹைப்ரிட் எடிஷனானது அதன் வழக்கமான பிரிவில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது உள்ளூர் சந்தையில் 113hp குதிரைத்திறன் மற்றும் 144Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியாவில் மின்சார ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் வழங்கபட வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. அந்த அம்சம் காரின் விலையை அதிகரித்து விற்பனையை பாதிக்கும் என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

செல்டோஸ் ஹைப்ரிட் - விலை, போட்டியாளர்கள்

செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷனின் விலை வரம்பானது சுமார் 18 லட்சத்தில் தொடங்கி 25 லட்சம் வரை நீளக்கூடும் என கருதப்படுகிறது. உள்ளூ சந்தையில் இந்த மாடலானது மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்கிறது. இதுபோக விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள அடுத்த தலைமுறை ஹுண்டாய் க்ரேட்டா ஹைப்ரிட், ரெனால்டின் டஸ்டர் மற்றும் நிசானின் டெக்டான் கார் மாடல்களும் செல்டோஸ் ஹைப்ரிட் மாடலுக்கு நெருக்கடி தரக்கூடும்.

Read Entire Article