இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா. கியாவின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தனது கார்களுக்கு மாதாந்திர தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். கியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

1. Kia Carnival:

கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் இந்த Kia Carnival. எம்பிவி காரான இந்த காருக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியாக ரூபாய் 1.50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 1 லட்சமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. சொகுசு காரான இந்த காரின் விலை ரூபாய் 74.43 லட்சம் ஆகும். 2151 சிசி டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த ஆடம்பர கார் ஒரு மிகப்பெரிய குடும்பம் செல்வதற்கு ஏற்ற காராகும். டீசல் மற்றும் ஹைப்ரிட் வேரியண்டில் இந்த கார் உள்ளது.

2.Kia Carens Clavis:

கியாவின் மற்றொரு வெற்றிகரமான கார் இந்த Kia Carens Clavis. இந்த காருக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியாக ரூபாய் 1.20 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 70 ஆயிரமும், லாயல்டி தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அல்லது ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.20 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.96 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 27.08 லட்சம் ஆகும். லெவல் 2 அடாஸ், 12.3 இன்ச் டிஸ்ப்ளே வசதிகள் கொண்டது இந்த கார்.

3.Kia Carens Clavis EV:

கியாவின் மின்சார காரான இந்த Kia Carens Clavis EV காருக்கு செப்டம்பர் தள்ளுபடியாக ரூபாய் 55 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. லாயல்டி போனசாக ரூபாய் 20 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார காரின் தொடக்க விலை ரூபாய் 18.04 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை ஆகும்.

4.Kia Sonet:

கியாவின் மிகவும் பிரபலமான கார் இந்த Sonet. இந்த காருக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும் இதில் அடங்கும் எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அல்லது ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 13.80 லட்சம் ஆகும்.

5. Kia Syros:

கியாவின் மிகவும் வெற்றிகரமான கார் இந்த Kia Syros. இந்த காருக்கு செப்டம்பர் தள்ளுபடியாக ரூபாய் 35 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபர் மற்றும் ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.42 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 15 லட்சம் ஆகும்.

6.Kia Carens:

சிஎன்ஜி இல்லாத வேரியண்டான இந்த Kia Carens காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அல்லது எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 10 ஆயிரமும் இதில் அடங்கும். இதன் விலை ரூபாய் 11.12 லட்சம் ஆகும்.