Kia SUV Discounts Sept 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் க்ளாவிஸ் மாடலுக்கு, செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் கியா நிறுவன சலுகைகள்:

செப்டம்பர் மாதத்தில் கியா நிறுவன கார் மாடல்களை வாங்க விரும்புவோரை, ஊக்குவிக்கும் விதமாக அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்க்ரேப்பேஜ் பலன்கள், லாயல்டி ஊக்கத்தொகை மற்றும் கார்ப்ரேட் சலுகைகள் ஆகியவை அடங்கும். இந்த மாதத்தில் ப்ராண்டின் அறிவிப்பால் அதிக சலுகைகளை பெறும் கார் மாடல்களாக காரென்ஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸ் திகழ்கின்றன. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த பலன்களை பயனர்கள் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா எஸ்யுவிக்களுக்கான சலுகை விவரங்கள்:

1. கியா கார்னிவல்

உள்நாட்டு சந்தையில் தென்கொரிய நிறுவனத்தின் முதன்மையான MPV ஆன கார்னிவல் , இந்த மாதம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான சலுகைகளை பெறுகிறது. இது 2026ம் ஆண்டின் உற்பத்தி மாடலுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக ரூ. 1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ. 50,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. ஒரே ஒரு வேரியண்டில் ரூ. 59.65 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் இது விற்பனையாகிறது.

2. கியா கேரன்ஸ் க்ளாவிஸ்

கடந்த 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கேரன்ஸ் க்ளாவிஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜின் மாடல்கள், இந்த மாதம் ரூ.70,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 லாயல்டி போனஸை பெறுகிறது. கூடுதலாக ரூ.30,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அல்லது ரூ.20,000 மதிப்புள்ள ஸ்க்ரேப்பேஜ் ஊக்கத்தொகைகளையும் பெறலாம். மொத்தத்தில், கேரன்ஸ் க்ளாவிஸ் காரை ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பலன்களுடன் சொந்தமாக்கலாம்.

இதற்கிடையில், கேரன்ஸ் க்ளாவிஸின் 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் ரூ. 65,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இதில் ரூ. 10,000 ரொக்க தள்ளுபடி, ரூ. 20,000 லாயல்டி ஊக்கத்தொகை, ரூ. 30,000 எக்ஸ்சேஞ்ச் பலன் அல்லது ரூ. 20,000 ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடி ஆகியவை அடங்கும். கியா கேரன்ஸ் க்ளாவிஸின் விலை ரூ. 11.39 லட்சம் முதல் ரூ. 20.00 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் EV

கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனுக்கு, ரூ. 20,000 லாயல்டி போனஸ், ரூ. 15,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி, மற்றும் ரூ. 20,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் சலுகை ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்தச் சலுகைகள் MY26 கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும் இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 55,000 வரை செல்கிறது. இந்த எம்பிவியின் விலை ரூ. 18.04 லட்சம் முதல் ரூ. 25.00 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. கியா சோனெட்

இந்த மாதம் கியா சோனெட் (MY26) காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூ. 50,000 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம். காரின் வகையைப் பொறுத்து, ரூ. 15,000 ரொக்க தள்ளுபடி, ரூ. 15,000 வரையிலான கார்ப்பரேட் சலுகையும் கிடைக்கிறது. மேலும், ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி அல்லது ரூ. 15,000 மதிப்புள்ள ஸ்க்ரேப்பேஜ் ஊக்கத்தொகையும் உண்டு. கியா சோனெட் காரின் விலை ரூ. 7.41 லட்சம் முதல் ரூ. 13.80 லட்சம் வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Kia Hybrid Cars: மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை

5. கியா சைரோஸ்

சைரோஸின் (MY26) இன்ஜின் எடிஷனை வாங்குபவர்களுக்கு ரூ.15,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும். இதுபோக ரூ.20,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அல்லது ஸ்க்ரேப்பேஜ் பலன்களில் ஒன்றையும் தேர்வு செய்யலாம். ரூ.8.42 லட்சத்தில் தொடங்கி ரூ.15.00 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கும் சைரோஸுக்கான ஒருங்கிணைந்த தள்ளுபடி ரூ.35,000 ஆகும்.

6 கியா கேரன்ஸ்

MY26 கியா கேரன்ஸின் CNG அல்லாத வேரியன்ட்களுக்கு, ரூ.15,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.20,000 மதிப்புள்ள ஸ்க்ரேப்பேஜ் பலன்கள் அல்லது ரூ.10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவை வழங்கப்படுகின்றன. சைரோஸைப் போலவே, கேரன்ஸ் வாடிக்கையாளர்களும் இந்த மாதம் ரூ.35,000 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம். கியா கேரன்ஸில் விற்பனையில் உள்ள ஒற்றை வேரியண்டின் விலை ரூ.11.12 லட்சம் ஆகும்.