கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

என்னென்ன லாட்டரிகள்?

கேரளா லாட்டரி என்பது கேரள அரசால் நடத்தப்படும் முழுமையாக சட்டபூர்வமான, பாரதிராஜ்ய அரசின் அனுமதி பெற்ற லாட்டரி திட்டமாகும். இது, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Weekly & Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்பர் டிரா (Bumper Draws) என்பவற்றைக் கொண்டுள்ளது.

கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அரசு லாட்டரி அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நேர்மையாக நடைபெற அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர். தினசரி பல்வேறு பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று (பிப்ரவரி 6, 2026) சுவர்ண கேரளம் லாட்டரி குலுக்கல் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிய இங்கே இணைந்திருங்கள்.