Keerthana: அரசுப்பள்ளி அவலம்.. கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.. ரவுண்டு கட்டிய அன்பில், உதயநிதி!

3 months ago 10
ARTICLE AD

அரசுப்பள்ளியின் நிலைமை குறித்து அமைச்சர் கீர்த்தனா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கீர்த்தனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு

தவெக அரசின் தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனா, தன் சொந்த தொகுதியாக சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவி ஒருவருக்கு ஆங்கிலம் பேச வரவில்லை என ஆசிரியரிடம் அவர் பேசிய உரையாடல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கீர்த்தனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்பில் மகேஸ் விமர்சனம் - கீர்த்தனா பதிலடி

தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல.. அது அமைச்சரின் பணியும் அதுவல்ல எனவும் கூறியதோடு, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து கடைசி பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் என தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அன்பில் மகேஸ், “நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது. அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல.. அது பெருமையின் அடையாளம் எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கீர்த்தனா, “நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்” என தெரிவித்தார். அதாவது அமைச்சர் கீர்த்தனா ஒரு வீடியோவில் ஆங்கிலம் பேசியதை இலக்கண பிழை இருப்பதாக வீடியோ ஒன்று வைரலானதை அவர் கண்டித்து இந்த பதிவை வெளியிட்டார்.

Also Read: Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்

உதயநிதியும் கடும் கண்டனம்

அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் கிளாஸ் எடுக்க வேண்டும என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் பங்கிற்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனை மறைமுகமாக குறிப்பிட்டு பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?..அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில் என தெரிவித்துள்ளார்.

Read Entire Article