நாளுக்கு நாள் சீரியல் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதோடு புதிய புதிய சீரியல்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் இராமாயணம், அன்னம், மருமகள், கயல், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் 2 தொடர்கிறது, புது வசந்தம், இலக்கியா, செவ்வந்தி என்று பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், பல சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதில் 'கயல்' சீரியலும் ஒன்று. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கயல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தற்போது வரையில் 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் முன்னணி ரோலில் நடித்து வருகின்றனர்.

குடும்பக் கதையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முன்னணி ரோலில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே போன்று சஞ்சீவ் கார்த்திக்கிற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுதவிர மற்ற நடிகர், நடிகைகளுக்கு அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படுகிறது. விக்னேஷ்வரனாக நடிக்கும் கோபிக்கும், அவருக்கு மனைவியாக நடிப்பவருக்கும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். மேலும், ஐயப்பன் (மூர்த்தி), மீனாகுமரி (காமாட்சி), வழக்கு எண் முத்து ராமன் (தர்மலிங்கம்) ஆகியோருக்கு ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்கள் தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் சுமங்கலியாக வரும் வடிவுக்கரசி என்ற வடிவுக்கும், ராஜசேகரின் மனைவி சிவசங்கரியாக வரும் உமா ரியாஸூக்கும் எவ்வளவு சம்பளம் குறித்த தகவல் இல்லை என்றாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வரையில் சம்பளம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.