இயக்குநர் பிரதீர் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். ஒரே நாளில் தமிழ் சென்ஷேனல் ஹீரோயினாக மாறியிருக்கும் கயாடு லோஹருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. சிம்பு, அதர்வா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சென்ஷேனல் ஹீரோயின்

சிம்பு நடிக்கும் 49, அதர்வாவுடன் இதயம் முரளி போன்ற படங்களில் நடித்து வருகிறார் கயாடு. அதேபோல், ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இம்மார்டல் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதில், பாத் டப்பில் குளித்து கொண்டிருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை பார்த்ததுமே பேச்சுலர் படத்தின் இரண்டாம் பாகமா என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். படங்களில் நடித்து வந்தாலும் புதிய தயாரிப்பாளருடன் கயாடு லோஹர் பெயர் அடிபட்டது. இதில், அவரது பெயர் பெரிய அளவில் கிசிகிசுக்கப்பட்டதால் சர்ச்சையாக மாறியது.

இரவு பார்ட்டியில் ரூ.35 லட்சம்

கயடு லோஹர் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்\பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் தொடபுடையவர்கள் நடத்திய பார்ட்டிக்கு கயடு லோஹர் கலந்துகொண்டதாகவும் ஒரு இரவு பார்ட்டியில் விருந்தினராக செல்ல அவர் ரூ 35 லட்சம் வரை சம்பளம் பெற்றதாகவும் கிசிகிசுக்கப்பட்டது. அதேபோன்று பல நடிகர்கள், நடிகைகளும் இந்த இரவு பார்ட்டியில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக கயாடு லோஹர் விளக்கம் தரவில்லை. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

டோவினோ தாமஸ் படத்தில் கயாடு

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும் கயாடு லோஹர் தற்போது டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கும் பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே "19ஆம் நூற்றாண்டு, ஒரு ஜாதி ஜாதகம் ஆகிய படங்களில் கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டோவினோ தாமஸ் நடிக்கும் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. அண்மையில் போலி என்கவுண்டருடன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜன கன மன படத்தை இயக்கியவர்தான் டிஜோ ஜோஸ் ஆண்டனி. அவரது இயக்கத்தில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் உருவாகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.