தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும். இதனால், பகல் பொழுதில் வெளியே செல்வதே பெரும் சிரமமான காரியமாக இருக்கும். இந்நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் வானிலையான் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது.

கோடைகாலம்:

வருடத்தில் ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு வானிலை பருவங்கள் மாறி மாறி வருகின்றனர். ஆண்டு முழுவதும் வெயில் அடித்து வந்தாலும், மே மாதம் வெயில்தான் தமிழ்நாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு அறிவியல் ரீதியாக , பூமியின் வட அரைக்கோளத்தை நோக்கி சூரிய ஒளி , செங்குத்தாக படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த காலத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும். பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் மேலும் வெப்பநிலையும் பதிவாகுவது வழக்கம். இதனால், பல பகுதிகளில் வறண்ட வானிலையால், நீர் பற்றாக்குறையும் ஏற்படும். இதனால் மனிதர்கள் பாதிப்படுவது மட்டுமன்றி, பறவைகள் மற்றும் விலங்குகளும் பாதிக்கப்படும்.

அக்னி நட்சத்திரம்:

இந்நிலையில், நாளை தொடங்கும் கத்தரி வெயிலானது, மே மாதம் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனால் கடுமையான வெப்பநிலை நிலவும் என்பதால், பகல் பொழுதில் குறிப்பாக மதிய நேரங்களில், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் கோடைகாலத்தில், உடலை நீரேற்றம் வைத்திருக்க அடிக்கடி நீர் அருந்துங்கள், பழச்சாறு மற்றும் இளநீர் அருந்துவதும் நல்லது.

இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எவ்வாறு என்பது குறித்து பார்ப்போம்.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

04-05-2025: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை:

05-05-2025: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை:

தமிழகத்தில் 06-05-2025 நாளில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.