Karuppu Muruganantham: கைவிட்ட கோர்ட்.. கைதாகிறாரா பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம்?

3 weeks ago 2
ARTICLE AD

தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக பெண் அளித்த புகாரில் முன்ஜாமீன் கோரி கருப்பு முருகானந்தம் வழக்கில் கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கருப்பு முருகானந்தம்

அதில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த திவ்யா சேஷாத்ரி என்பவர் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும், அந்த பெண்ணும் மிக நெருக்கமாக இருந்ததாகவும், அவரை இழிவுப்படுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளாமல் என் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. தனது கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என வேறொரு நண்பரும் மூலமாக அறிமுகமான அவருக்கு பல்வேறு உதவிகளை நான் செய்துள்ளேன்.

முன்ஜாமீன் கேட்டு மனு

இந்நிலையில், என் மீது பொய்யான புகாரை அந்த பெண் அளித்துள்ளார். நான் சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்பில் உள்ளேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படுவேன் என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிபதி முரளி முன்பாக  இன்று விசாரணைக்கு வந்தது. கருப்பு முருகானந்தம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இது ஹனி டிராப் விவகாரம் ஒரு பொய்யான முனைப்பட்ட குற்றச்சாட்டு. எனவே நீதிமன்றம் இதனை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

கைதுக்கு தடை இல்லை

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவில் தங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். மனுதாரரால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிப்பதற்கு எங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். மேலும் இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் இடைப்பட்ட காலங்களில் மனுதாரரை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நீதிபதி நிராகரித்துவிட்டார். இந்த விவகாரத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

Read Entire Article