Karthigai Deepam: யார் இந்த மீனாட்சி? உண்மை உடையப்போவது எப்போது? கார்த்திகை தீபத்தில் இன்று

2 months ago 6
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவனாண்டிக்கு சேட்டு ஒருவர் போன் செய்து பணம் தருவதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

யார் இந்த மீனாட்சி?

அதாவது, சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்யும் மீனாட்சி என்னுடைய கணவருக்கு இறந்த நாள். திதி கொடுக்க போகணும் என்று விடுமுறை கேட்டு கிளம்பி செல்கிறாள். கோவிலில் குளத்தின் அருகே தன்னுடைய கணவரின் போட்டோவை வைத்து திதி கொடுக்கிறார்.

இதே கோவிலுக்கு ரேவதியும் அவளது அக்காவுடன் வந்திருக்க இந்த போட்டோவை பார்த்து விடுவார்களா? மீனாட்சி யார் என்ற உண்மை தெரிய வருமா? என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது. அடுத்து ரேவதி சாமியாரை சந்திக்க அவர் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் குறைய சுமங்கலி பூஜை நடத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.

நிலத்தை வாங்கிய கார்த்திக்:

கார்த்திக் கோவிலுக்கு வர மீனாட்சியை சந்திக்கிறான், அவளிடம் உங்க கணவர் பெயர் என்ன? என்று கேட்க அதற்குள் அவளுக்கு ஒரு போன் கால் வர ஒரு நிமிஷம் என அங்கிருந்து கிளம்பி வருகிறாள், அடுத்து ரேவதி வீட்டிற்க்கு வந்து சுமங்கலி பூஜை குறித்து சொல்கிறாள்.

அடுத்து கார்த்திக் 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article