தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தான் எம்டி என்ற விஷயத்தை சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சாமுண்டீஸ்வரியின் ப்ளான்:

அதாவது, சாமுண்டீஸ்வரி பிரியாவை தன் பக்கமாக இழுத்து கார்த்தி மற்றும் ரேவதியை பிரிக்க திட்டமிடுகிறாள். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் ரேவதியின் ஆபீசுக்கு கிளம்ப சாமுண்டீஸ்வரி நானே உன்னை டிராப் பண்ணிடுறேன் என்று சொல்ல அவளும் நம்பி செல்கிறாள். இவர்களுடன் மருது மற்றும் சூரியகலாவும் கிளம்பி செல்கின்றனர்.

சாமுண்டீஸ்வரி நேராக வண்டியை ரெஜிஸ்டர் ஆபீசுக்கு விட ரேவதி குழப்பம் அடைகிறாள். மேலும் பிரியாவுக்கு போன் செய்து எக்காரணத்தைக் கொண்டும் கார்த்தி அங்கிருந்து வெளியே வரக்கூடாது, அவனை வெளிய விடாம பார்த்துக்கோ என்று சொல்கிறாள்.

கட்டாய கல்யாணம்:

இங்கே ஏற்கனவே கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கும் சாமுண்டீஸ்வரி ரேவதியை கையெழுத்து மட்டும் போட சொல்ல ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இது கல்யாணம் இல்ல வெறும் கையெழுத்து தான் போடப்போற என்று சொன்ன ரேவதி அதை ஏற்க மறுக்கிறாள். மறுபக்கம் ரேவதி இன்னும் ஆபீசுக்கு வராத காரணத்தினால் கார்த்திக் குழப்பம் அடைந்து மயில்வாகனத்திற்கு போன் செய்ய நான்கு பேரும் கிளம்பிப் சென்ற விஷயத்தை சொல்ல கார்த்திக் சந்தேகம் அடைகிறான்.

ப்ரியா சதி:

ரிஜிஸ்டர் ஆபீஸில் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க கார்த்தி கிளம்பி வர அவன் லிப்ட்டில் ஏறியதும் பிரியா லிப்டை ஆப் செய்து விடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.