Karthigai Deepam: புருஷனுக்கு நன்றி சொன்ன மனைவி.. ரேவதியின் மனதை மாற்றுகிறானா கார்த்தி?

7 months ago 5
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திகால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பரமேஸ்வரி பாட்டியின் ஆசைப்படி கும்பசோறு சாப்பிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திக்கு பாராட்டு:

அதாவது, எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் கரண்ட் வர இதை பார்த்த சந்திரகலாவிற்கு நம்ம வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் இல்லாமல் போச்சு என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது மனதுக்கு நிறைவாக இருப்பதாகவும் இதற்கெல்லாம் காரணம் மாப்பிள்ளை ராஜா தான் என்று கார்த்தியை பாராட்டுகின்றனர்.

கார்த்திக்கு நன்றி சொன்ன ரேவதி:

அடுத்து ரூமுக்கு வந்த ரேவதி எனக்கும் இப்படியெல்லாம் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடணும் என்ற ஆசை இருந்தது. அது உங்களால் இப்போ நிறைவேறி விட்டது, நன்றி என்று சொல்கிறாள்.

இதனைத்தொடர்ந்து, அடுத்த நாள் மயில்வாகனம் மற்றும் ரோகினி என இருவரும் டாக்டரை சந்தித்து குழந்தை உருவாகவில்லை என்று பரிசோதனை செய்து கொள்ள இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லி அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட சொல்கிறார்.

ஆசிட் அடிக்க திட்டம்:

பிறகு சுவாதியை கல்லூரியில் நடக்கும் பங்ஷனில் பாட சொல்லி ரேவதி மற்றும் கார்த்திக் என இருவரும் அழைத்து வருகின்றனர். அப்போது ரேவதி நான் படிக்கும் போது இப்படியெல்லாம் எதுவும் நடக்கல என்று தனது கல்லூரி அனுபவத்தை சொல்லியபடி வருகிறாள்.

பிறகு ரேவதி தண்ணீர் குடிக்க போக அப்போது இரண்டு மாணவர்கள் பேசி கொள்வதை கேட்கிறாள். அதில் ஒருவன் திவ்யா என்ற பெண்ணின் மீது ஆசிட் அடிக்க போவதாக சொல்ல இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இதை எபப்டியாவது தடுக்க வேண்டும் என்று கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள்.

காப்பாற்றிய கார்த்தி:

கார்த்தி ஸ்வாதி மூலமாக அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்து கடைசி நொடியில் காப்பாற்றி, அந்த மாணவனை அடித்து துவைத்து அறிவுரை வழங்குகிறான். சண்டையில் கார்த்தியின் சட்டை கிழிந்து கிடப்பதை பார்த்து ரேவதி வருத்தமடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article