Karthigai Deepam: புருஷனிடம் காதலைச் சொல்ல ஏங்கும் மனைவி.. தவியாய் தவிக்கும் ரேவதி

5 months ago 4
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் கிருஷ்ணன் ஸ்வாதி பாட்டு பாட வரக்கூடாது என்று தனது ஆட்களை ஏற்பாடு செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காதலைச் சொல்ல தவிக்கும் ரேவதி:

அதாவது, சுவாதி கச்சேரிக்கு ரெடியாகி கொண்டிருந்தாள். கார்த்தி ரேவதியிடம் எல்லாம் ஓகே தானே என்று கேட்க, அவளும் ஓகே என சொல்கிறாள்.

கார்த்திக் தனியாக இருப்பதால் அவனிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கும் ரேவதி தனது மனதில் இருப்பதை பேசி திரும்ப கார்த்தி போன் கால் வந்து இங்கிருந்து தள்ளி சென்றது தெரிய வருகிறது. இதனால் இந்த முறையில் காதலை சொல்ல முடியாமல் ரேவதி ஏமாற்றம் அடைகிறாள்.

சுவாதி பையில் குழந்தையின் நகை:

மறுபக்கம் சுவாதி ரெடியாகிக் கொண்டிருக்கும் போது, ஒரு குழந்தை தனியாக விளையாட அந்த குழந்தையுடன் கொஞ்சி பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் ரூம் பாய் முருகன் குழந்தையின் நகை ஒன்றை திருடி அதை சுவாதி பையில் வைத்து விடுகிறான்.

பிறகு இவர்கள் கச்சேரிக்கு கிளம்பி வர ரேவதி காபி வேண்டும் என்று கேட்க கார்த்திக் வாங்கிட்டு வர செல்கிறான். இந்த இடைப்பட்ட கேப்பில் போலீஸ் பாதியை திருட்டு கேஸில் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

கண்டுபிடித்த கார்த்திக்:

ஒரு பக்கம் கச்சேரி தொடங்கி நடக்க மறுப்பக்கம் கார்த்திக் சிசிடிவி காட்சிகளை வைத்து ரூம் பாய் தான் ஏதோ செய்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து சுவாதியை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டுகளியுங்கள்.

Read Entire Article