Karthigai Deepam: பழிவாங்கத் துடிக்கும் காளியம்மாள்.. சாமுண்டீஸ்வரியை காப்பாற்றப்போவது யார்?

1 month ago 5
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சந்திரகலா உதவியுடன் முத்துவேல் வீட்டிலிருந்து நகையை திருடிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காளியம்மாள் சதி:

அதாவது, முத்துவேல் நகை திருடி கொண்டு போக காளியம்மா இதை வைத்து சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்த திட்டமிடுகிறாள். அடுத்த நாள் காலையில் பஞ்சாயத்து கூடுகிறது. நகையை  பிரித்து பெட்டி பெட்டியாக ஊர்காரர்களுக்கு கொடுக்க அதை வாங்கிக்கொண்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

முத்துவேல் சிவனாண்டி ஆகியோர் ஊர் மக்களிடம் பெட்டியை திறந்து பார்க்க சொல்ல, பெட்டியை திறந்து பார்க்க உள்ளே வெறும் கல்லும் மண்ணும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

சாமுண்டீஸ்வரி மீது பழி:

சாமுண்டீஸ்வரி தான் அவங்க அம்மா மாதிரி நகையை திருடி இப்படி ஊர் மக்களை ஏமாத்தி இருக்காங்க என பழி சுமத்துகின்றனர். நகை திருடிய பழியை சுமந்து நிற்கும் சாமுண்டீஸ்வரியை மருமகன் கார்த்திக் எப்படி காப்பாற்றப்போகிறார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article