Karthigai Deepam: பணத்திற்காக அலையும் சாமுண்டீஸ்வரி.. கையை விரித்த சேட்டு - கார்த்திகை தீபத்தில் இன்று

1 month ago 3
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜர் காக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அல்லோல்படும் சாமுண்டீஸ்வரி:

அதாவது, பேங்க் மேனேஜர் வராத காரணத்தினால் பேங்கில் பணம் கிடைக்காமல் போகிறது, அசிஸ்டன்ட் மேனேஜர் பேங்க் மேனேஜர் கையெழுத்து இல்லாமல் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார்.

இதனால் சாமுண்டீஸ்வரி தனக்கு தெரிந்த சேட்டுவிடம் பணத்தை வாங்கி தொழிலாளிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள்.

சாமுண்டீஸ்வரிக்காக களமிறங்கிய கார்த்திக்:

கார்த்திக் இதெல்லாம் சிவணாண்டியின் திட்டமாக இருக்கும் என சந்தேகப்பட்டு இங்கு வந்து மேனேஜரை என்ன பண்ணீங்க என்று விசாரிக்க அவர்கள் கார்த்தியிடம் வாக்குவாதம் செய்கின்றனர். கார்த்திக் என் அத்தையோட குடும்பத்திற்காக நான் எப்பவும் நிற்பேன் என்று பதிலடி கொடுக்கிறான்.

அடுத்ததாக கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கொஞ்சம் வெளியே சென்று விட்டு வருவதாக சொல்லி கிளம்பி வருகிறான். சாமுண்டீஸ்வரி சேட்டுக்கு போன் போட்டு பணத்தை கேட்க அவரும் வாங்க மேடம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அங்கு கிளம்பி செல்கிறாள்.

கையை விரித்த சேட்டு:

சாமுண்டீஸ்வரியை நேரில் பார்த்த சேட்டு இப்போதைக்கு நீங்க கேக்குற பணம் இல்லை என்று ஜகா வாங்குகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி ஏமாற்றத்துடன் வெளியே வருகிறாள். சிவனாண்டி சேட்டு மகனை கடத்தி இப்படி சொல்ல வைத்தது தெரிய வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article