Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய ரேவதி.. பதறியடித்து ஓடி வந்த கணவர் - நடந்தது என்ன?

2 weeks ago 3
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி பைக் ஷோரூம் கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்:

அதாவது, ரேவதி ஆட்டோ ஒன்றை பிடித்து பைக் ஷோரூம் செல்ல அவளால் ஜெயிலுக்கு சென்ற நபர்கள் ரேவதியை அடித்து தூக்க காரில் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

இன்னொரு பக்கம் வீட்டில்  கார்த்தியை பார்த்த சாமுண்டீஸ்வரி கூடிய சீக்கிரம் கூடிய சீக்கிரம் உங்களை பிரிச்சி உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று சவால் விட கார்த்திக் நான் இங்கதான் இருப்பேன், உங்களால எதுவும் செய்ய முடியாது என சவால் விடுகிறான்.

ரேவதியை அடித்து தூக்கிய கார்த்திக்:

அதன் பிறகு ரேவதி பைக் டெலிவரி கொடுக்க சொல்லிவிட்டு வெளியே வர அவளை அடித்து தூக்குவதற்காக காத்திருந்த கார் ரேவதி மீது மோத தூக்கி வீசப்படுகிறாள். இந்த சமயத்தில் கார்த்திக்கு ரேவதிக்கு எதுவும் நடந்தது போல உள்ளுணர்வு ஏற்படுகிறது.

இதனால் வீடு முழுக்க ரேவதியை தேடி ரோகினியிடம் விசாரிக்க ஒரு கட்டத்தில் ரோகினி ரேவதி வெளியே சென்ற விஷயத்தை சொல்கிறாள். இதனால் கார்த்திக் பதறி போய் ரேவதியை தேடி வருகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article