Kappalur: கப்பலூர் சுங்கச்சாவடியில் வலுக்கும் போராட்டம் - மதுரையில் பரபரப்பு

1 year ago 7
ARTICLE AD
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிப்பதால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், உள்ளூர் பொதுமக்கள், அதிமுகவினர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீசார் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Read Entire Article