விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கண்மணி. சீரியல் பாதியிலேயே வெளியேறிய கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முக்கிய நாயகியாக நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த கண்மணி தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

உருகிய மாமியார்

காதல் திருமணத்திற்கு பிறகு அஸ்வத்தும் - கண்மணியும் ஜோடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டடி ஷோவில் பங்கேற்றனர். அப்போது கண்மணியின் தாயார் செய்த சிறு தவறால் அஸ்வத் தோற்கும்படி ஆனது. அந்த தோல்வியை தாங்க முடியாத அஸ்வத்தின் மாமியார் மருமகனுக்காக கண்ணீர் விட்டார். என் மகனை போன்று அஸ்வத்தை பார்க்கிறேன். அவர் மாதிரி ஒரு மருமகன் கிடைப்பது கடினம் என்றும் என் செல்ல மருமகன் அஸ்வத்தை புகழ்ந்தார். அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தீனா இப்படியொரு மாமியார் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் கொஞ்சம் பொறாமையுடன் தெரிவித்தார்.

கண்மணி அறிவித்த மகிழ்ச்சி செய்தி

கண்மணி சீரியல்களில் நடித்து வந்தாலும் அஸ்வத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில், திருமணம் முடிந்த 5 மாதத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது கண்மணி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அஸ்வத் கண்மணியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படமும் வெளியாகி வைரல் ஆனது. இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கண்மணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அழகான ஆண் குழந்தை

இந்நிலையில், கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர். அந்த பதிவில், நாங்கள் இருவரும் ஒரு காதல் கதையை எழுதினோம். அந்த காதல் கதையில் ஆச்சர்யம் நிறைந்த புணித பயணம் கிடைத்திருக்கிறது. எங்களது செல்லக்குட்டியுடன் இந்த இனிய பயணம் தொடரும் என பதிவிட்டுள்ளனர். இதற்கு முதல் ஆளாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா சீரியல் நடிகர் விஜய் வாழ்த்துகள் மாப்ள. இனிமே உனக்கு செம அடி இருக்கு, என் குட்டி மச்சான்கிட்ட பத்ரமா இரு என தெரிவித்துள்ளார். அதேபோன்று பலரும் அஸ்வத் - கண்மணி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.