Kanguva Audio Launch : ரெண்டு நிமிஷம் சீன் பார்த்து மிரண்டுபோயிட்டேன்...கங்குவா படம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

1 year ago 7
ARTICLE AD
<h2>கங்குவா இசை வெளியீடு</h2> <p>சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. சூர்யா நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம் வெளியாகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக மிக ஆவலாக காத்திருக்கிறார்கள். அதே போல் சூர்யா இன்று நிகழ்ச்சியில் பேசுவதை கேட்கவும் ரசிகர்கள் அரங்கத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா , இயக்குநர் சிவா , நடிகர் பாபி தியோல் , மதன் கார்க்கி , நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படி கூறினார்.</p> <h2>கங்குவா படம் பற்றி கார்த்திக் சுப்பராஜ்</h2> <p>"நான் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் கங்குவா படத்தைப் பற்றி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். கங்குவா படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கங்குவா படத்தின் ஐந்து நிமிட காட்சியை &nbsp;சூர்யா என்கிட்ட காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம் ஆனால் அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்" என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்</p>
Read Entire Article