தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் கமல்ஹாசன். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படததில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கமலுக்கு ஜோடியாக மாறிய த்ரிஷா:

இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரும் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியானது முதலே இருவரும் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான ட்ரெயிலர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்துள்ளது. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், த்ரிஷா கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார் என்பது ட்ரெயிலரில் தெரியவந்துள்ளது.

சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம்:

அதுவும் ட்ரெயிலர் காட்சியில் கமல்ஹாசன் - த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் இடம்பிடித்துள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இருவருமே ஜோடியாக நடித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே அமைந்துள்ளது.

ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்த காதல் திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு - த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்க மாட்டார்கள். இதனால், இந்த படத்தில் அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த படத்திலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

த்ரிஷாதான் முக்கிய ரோலா?

சிம்புவும், த்ரிஷாவும் இதுவரை 3 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் அலை படத்தில் மட்டுமே அவர்கள் ஜோடி சேர்வது போல நடித்துள்ளனர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அவர்கள் காதல் தோல்வியில் முடியும். தற்போது வெளியாக உள்ள தக் லைஃப் படத்தில் ஜோடியாக நடிப்பார்கள்? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திலும் அவர்கள் ஜோடி சேரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் சாதாரண கதாநாயகியாக அல்லாமல் திரைக்கதையில் முக்கிய திருப்புமுனையாக த்ரிஷா கதாபாத்திரம் வடிவமைககப்பட்டுள்ளது என்றே கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படத்தில் மிகப்பெரிய தாதாவான கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளார். இறுதியில் கமல் - சிம்பு இடையே மோதல் வெடிப்பது போல படம் கட்டமைக்கப்பட்டிருப்பது படத்தின் ட்ரெயிலரில் தெரிகிறது. இந்த படம் வரும் ஜுன் 5ம் தேதி ரிலீசாகிறது.