Kallakurichi children: பெற்றோரை இழந்து யாரும் இல்லாமல் தவித்த 4 குழந்தைகள்.! சொன்னதை போல உதவிகளை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்

2 days ago 2
ARTICLE AD

பெற்றோரை இழந்த குழந்தைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டாட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் அவர்கள் 14.11.2025 அன்று உடல்நலக் குறையாள் காலமானார். அவரது மனைவி திருமதி வசந்தி அவர்களும் 2017ஆம் ஆண்டே உடல்நலக் குறைவால் கலைமானார். இத்தம்பதியருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைல் உள்ளனர்.

தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்

பெற்றோரை இழந்து தவிக்கும் நான்கு குழந்தைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார். இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் என்று  முதலமைச்சர் அவர்கள் தனது சமூகவலைதளப் பதியில் தெரிவித்திருந்தார்.

உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

அதன்படி, இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மறைந்த கமலக்கண்ணன் அவர்களின் மகள் செல்வி பாவண்யாவிற்கு ரூ.2.50000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.55.600/- மதிப்பீட்டில் வீடு கட்டுதவற்கு ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணியிட த்திற்கான பணி நியமன ஆணையினையும், மகள் செல்வி ரிஷிகா மற்றும் மகன் செல்வன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா ரூ.2000/- நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மகள் செல்வி ணோவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6,000/- உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

Read Entire Article