KA Sengottaiyan: “இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க” - செங்கோட்டையன் பேச்சால் தவெக அதிர்ச்சி!

2 days ago 1
ARTICLE AD

பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு செங்கோட்டையன் ஓட்டு கேட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனித்து போட்டியிடும் தவெக

ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 233 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மட்டுமல்லாது அக்கட்சி நிர்வாகிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

தவெக நிர்வாகியும் , கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் தமிழ் செல்வியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஈரோடு மாவட்டத்தில் 18 சதவிகிதம் பேருக்கு புற்றுநோய் இருக்கிறது என சொல்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று சொன்னால் இளைய சமுதாயமாக இருக்கின்ற நீங்கள் தான் ஒரு புரட்சியை உருவாக்க வேண்டும். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சி தளபதி விஜயை இரட்டை சிலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என சொன்னார். பின்னர் உடனடியாக சுதாரித்து நான் இரட்டை சிலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு கேட்டு பழகிவிட்டேன் என சமாளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆகி விட்டது. எவ்வளவு பெரிய கொடுமை. சென்சார் சான்றிதழ் தர முடியாது என சொன்னார்கள். எப்படி லீக் ஆகியிருக்கும்?. அவிநாசியில் இருக்கும் முருகப்பெருமானிடம் நான் முறையிடப்போகிறேன். அந்த முருகன் நம்மை காத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் அமைச்சர் முருகன் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு ஏன் இவ்வளவு சோதனை?

அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது?, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் விஜய் சென்றபோது 5 லட்சம் மக்கள் ரோட்டில் நின்று வரவேற்றனர். இதனைப் பார்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலங்கி போயுள்ளனர். நேற்று காரைக்குடி கூட்டத்திற்கு வரும்போது 10 நிமிடம் கால தாமதமாகி விட்டது. பேசக்கூடாது என்ற உத்தரவிடப்பட்டது. இந்தியாவில் விஜய்க்கு மட்டும் தான் இப்படி நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. படத்தை வெளியிட்டாமல் நெருக்கடி, சிபிஐ மூலம் நெருக்கடி, எந்த கூட்டத்துக்கும் செல்லக்கூடாது என நிபந்தனைகள் போன்றவை செய்யப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டாலும் இது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article