லெட்டர்பேடை வைத்து ஏமாற்றியவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக எதிர்க்கட்சியாக இரண்டாமிடத்திற்கும், அதிமுக 3ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதனிடையே அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதிமுக - திமுக கூட்டணி முயற்சி தான் தாங்கள் பதவி விலகி மாற்றுக் கட்சியைத் தேட காரணம் எனவும் விலகிய அனைவரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அடுத்தடுத்து அதிமுகவைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் கட்சி மாறுவது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயபாஸ்கர் பேசும்போது ஜாம்பவான்கள் எல்லோரும் இந்த பக்கம் வந்து விட்டார்கள். அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் லெட்டர் பேடு கட்சிக்காரர்கள் என கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஜாம்பவான்கள் தான். அந்தத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இவர்கள் எல்லாம் ஓடுகாலிகள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள். லெட்டர் பேடை வைத்து ஏமாற்றும் கூட்டம் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓடி இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிலடி கொடுத்தார்.

அதேபோல் ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் இருக்கும் 90 சதவிகிதம் பேர் தவெகவுக்கு வரப் போகிறார்கள். இரு கட்சிகளும் ஒன்று தான். அதிமுகவும், தவெகவும் இணைந்த மாதிரி தான் என தெரிவித்தது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதைவிட இரண்டு நாட்கள் முன்பு ஆதவ் அர்ஜூனா பேசும்போது தவெகவுடன் அதிமுக இணையும் என்ற கருத்தை சொன்னார். இப்போது நான் எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறேன். ஆதவ் அர்ஜூனாவை போல கொள்கை அல்லாத வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஓடும் ஓடுகாலி அண்ணா திமுகவினர் கிடையாது. இவருக்கு என்று தனித்தன்மை கிடையாது. திமுக, விடுதலை சிறுத்தைகள், அதிமுகவுக்கு வந்து விட்டு தவெகவுக்கு சென்று விட்டார். 2 ஆண்டுகளுக்குள் இத்தனை கட்சிகளுக்கு ஓடுகிறார் என்றால் ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன கொள்கை இருக்கிறது..

அதிமுக - தவெக இணைப்பு என ஆதவ் அர்ஜூனா சொல்கிறார். 51 ஆண்டுகால இயக்கமாக அதிமுக திகழ்கிறது. 31 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இனியும் இதனை சொன்னால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்தார்.