பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், லேப் டெக்னிசீயன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்:

காலிப்பணியிடம் - 1

தகுதி - எம்.பி.ஏ. அல்லது மேலாண்மை தொடர்பான முதுகலை பட்டயப் படிப்பு அல்லது சுகாதார நிர்வாக படிப்பு ஆகியவற்றுடன் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 26 ஆயிரத்து 500

புள்ளியியல் உதவியாளர்:

காலிப்பணியிடம் - 1

தகுதி - புள்ளியியல் படிப்பில் இளங்கலை அதனுடன் கம்யூட்டர் அப்ளிகேஷன்சில் பட்டயம் தேர்ச்சி இருக்க வேண்டும். மேலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 26 ஆயிரம்

சீனியர் டிபி ஆய்வக கண்காணிப்பாளர் :

காலிப்பணியிடம் - 1

தகுதி - பிஎஸ்சி இளங்கலை பட்டம் மற்றும் டிஎம்எல்டி படிப்பு இருக்க வேண்டும். ஓராண்டு அனுபவத்துடன் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். எம்எஸ் ஆஃபீஸ் கோர்ஸ் இரண்டு மாத பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 19 ஆயிரத்து 800 ஆகும்.

கணக்காளர்:

காலிப்பணியிடம் - 1

தகுதி - இளங்கலை வணிகவியல் ( பி.காம்) படிப்புடன் இரண்டு ஆண்டு அனுபவங்கள் இருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 16 ஆயிரம்

லேப் டெக்னீசியன்:

காலிப்பணியிடம் - 28

தகுதி - லேப் டெக்னாலஜியில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 13 ஆயிரம் இருக்க வேண்டும்.

டிபி சுகாதார பணியாளர்:

காலிப்பணியிடம் - 14

தகுதி - பி.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும். அல்லது 12ம் வகுப்புடன் சேர்த்து எம்பிஎச்டபுள்யூ, எல்எச்வி, ஏஎன்எம் அல்லது டிபி ஹெல்த் விசிட்டர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூபாய் 13 ஆயிரம்

வயது வரம்பு:

மேலே குறிப்பிட்ட வேலைகளுக்கு வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaicorporation.gov.i/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் தக்க ஆவணங்களுடன் வரும் 9ம் தேதி ( ஜுலை 9, 2025)க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.