JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!

4 months ago 9
ARTICLE AD

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜியோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் கலக்கிய இயக்குநர் ராஜேஷ்

2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சிவா மனசுல சக்தி” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எம்.ராஜேஷ். அனுயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்த இப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தை அவர் இயக்க அதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்றைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்க அதுவும் 100 நாட்களை கடந்து நன்றாக ஓடியது.

ஆனால் அதன்பிறகு ராஜேஷ் இயக்கிய எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனாலும் ஒவ்வொரு படம் வெளியாகும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்ற படத்தை இயக்க அதுவும் படுதோல்வியடைந்தது.

அதேசமயம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு வசனமும், விக்டிம், மை 3 போன்ற வெப் சீரிஸையும் ராஜேஷ் இயக்கி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ஃபார்முக்கு வர முயற்சி செய்து வருகிறார்.

Also Read: அம்மாவுக்கு திருமணம் செய்துவைத்த மகன்கள்..நூறுசாமி கதையின் நிஜ மனிதர்கள்

ஜாலியா இருந்த ஒருத்தன் படம்

இந்த நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவா - ராஜேஷ் இணைந்துள்ள படம் “ஜாலியா இருந்த ஒருத்தன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக இவானா நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டரில் பரிதாபங்கள் சுதாகர் நடித்துள்ளார். சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அஷிஷ் ஜோசப் எடிட்டிங் பணி செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

இதில் ஜீவாவும், சுதாகரும் ஒரு நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஜீவா தனக்கு அரசியலில் ஈடுபாடில்லை, நான் சாதாரண மக்களாகவே இருந்து விட்டு போகிறேன் என தெரிவிக்கிறார். அதற்கு சுதாகர், மச்சி ஒரு காலத்தில் உன்னை மாதிரி கல்யாண நிப்பாட்டுவதற்கு மண்டபத்திற்கு வந்தவர் தான் இன்னைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர். வாய்ப்பு வரும்போது வேண்டாம்ன்னு சொல்லக்கூடாது. வாரிப் போட்டுக்கணும்" என தெரிவிக்கிறார். டீசர் முடிவில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் நடித்த யூத் படத்தின் காட்சிகளும் காட்டப்பட்டுள்ளது.

Read Entire Article