JEE NEET Merge: இனி ஒரே நுழைவுத்தேர்வு.. ஜேஇஇ, நீட் தேர்வுகள் இணைப்பு? மத்திய அரசு அதிரடி திட்டம்

1 week ago 3
ARTICLE AD

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு மத்தியில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) ஆகிய இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைத்து, இனி ஒரே பொது நுழைவுத் தேர்வாக நடத்த மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த நீட் இளநிலைத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்தே, தேர்வு நடைமுறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் இந்த அதிரடி முடிவு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வுகளில், அண்மைக் காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின.

நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம்

இது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

இதற்கு நிரந்தரத் தீர்வாக, தனித்தனியாக நடத்தப்படும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை இனி ஒருங்கிணைத்து, ஒரே பொதுவான மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வாக (Joint Medical and Engineering Entrance Exam) நடத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் பல தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதில் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள் தவிர்க்கப்படும். மேலும், தேர்வுகளை மிகவும் பாதுகாப்பாகவும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராத வகையிலும் நடத்துவது எளிதாகும் என அரசு கருதுகிறது.

உயர்மட்டக் குழு அமைப்பு

தேர்வு நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்தும், தேசியத் தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளைச் சீரமைப்பது குறித்தும் ஆராய மத்தியக் கல்வி அமைச்சகம் ஏற்கனவே ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் விரிவான ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்த புதிய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு முறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவின் கல்வி முறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article