Jayakumar Press Meet: சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழ்நாட்டில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. ஊழல் செய்ய வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். இயற்கை வளம் சூறையாடுவதை அதிமுக அனுமதிக்காது, மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.தொடர்ந்து பெரியாருக்கு எதிராக சீமான் பேச்சு, ஈசிஆர் சம்பவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.