Jasprit Bumrah: டெஸ்டில் பும்ரா கதை ஓவர்? வேகமும் இல்லை, ராசியும் இல்லை - ஓரங்கட்ட முடிவெடுத்த பிசிசிஐ?

4 months ago 5
ARTICLE AD

Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பும்ரா விளையாடிய ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அபாரம்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. அதன் முடிவில் 2-2 என தொடரை சமன் செய்து, கில் தலைமையிலான அணி அசத்தியது. சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு, கில் மற்றும் கே. எல். ராகுலின் பேட்டிங், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் ஆல்-ரவுண்டர் திறன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன. அதேநேரம், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓரங்கட்டப்படும் பும்ரா?

நீண்ட கால கெரியர் மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு, இங்கிலாந்து தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.  அப்படி அவர் பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியிலும், ஒன்று ட்ராவிலும் முடிந்தது. அதேநேரம், அவர் விளையாடாத இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இது பிளேயிங் லெவனில் பும்ராவிற்கான முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக உள்ளது. செயல்பாடு மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியிலும் பும்ராவின் பங்களிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் எதிர்மறையாகவே உள்ளன.

வேகமும் இல்லை..ராசியும் இல்லை..

நான்காவது போட்டியில் பும்ராவின் வேகம் என்பது விமர்சனத்திற்குள்ளானது. காரணம் அவர் வீசியதில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பந்துகள் மட்டுமே, 140 கிலோ மீட்டர் வேகத்தை எட்டின. அவருக்கு தெளிவான எண்ணம் இருந்தாலும், தொடர்ந்து சீரான வேகத்தில் பந்துவீச உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என பல முன்னாள் வீரர்களும் குறிப்பிட்டனர்.

இதுபோக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து அணியின் வெற்றிக்கான பங்களிப்பு தொடர்பான விவரங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டில் பும்ரா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல் இந்திய அணி இதுவரை, 75 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் பும்ரா களமிறங்கிய 47 போட்டிகளில் 20 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். அதேநேரம், அவரின்றி களமிறங்கிய 28 டெஸ்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனால், பும்ரா டெஸ்ட் அணியில் ராசியில்லாத வீரர் என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.

பும்ராவிற்கு மட்டும் பாரபட்சமா?

பும்ராவிற்கு மட்டும் தான் பணிச்சுமையா? எனக் குறிப்பிட்டு ஏற்கனவே பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தான், சிராஜ் இந்தாண்டு மட்டும் 213.3 ஓவர்கள் வீசி 27 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்திய நிலையில், பும்ரா 129.4 ஓவர்கள் வீசி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த தரவுகளை பார்த்தால், பும்ராவை காட்டிலும் அதிகமாக அணிக்குள் பங்களிப்பு தரும் சிராஜிற்கு அணி நிர்வாகம் ஓய்வு அளிக்கப்படாதது ஏன்? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

டெஸ்ட் அணியில் இருந்து பும்ரா நீக்கம்?

இன்றைய தேதிக்கு சர்வதேச அளவில் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அடிக்கடி காயமடைவது, தொடர்ந்து 140+ கிமீ வேகத்தில் பந்து வீச முடியாதது, முக்கிய நேரங்களில் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அதிகளவில் விக்கெட் வீழ்த்த முடியாதது (இங்கிலாந்து தொடரில்), வெற்றிபெற்ற போட்டிகளில் பங்களிப்பு ஆகியவை பும்ராவிற்கு எதிராக உள்ளன. அதேநேரம், அவர் இல்லாவிட்டாலும் வலுவான பவுலிங் யூனிட்டை கட்டமைக்க முடியும் என்பதை இங்கிலாந்து தொடர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் பும்ரா விரைவிலேயே ஓய்வு பெறக்கூடும் என கூறப்படுகிறது.

ஒருநாள்..டி20 போட்டிகள்..

பும்ராவின் துல்லியமான யார்க்கர்கள், ரன் வேகத்தை கட்டுப்படுத்துவது, முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது என, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  பும்ரா இன்றளவும் சிறந்து விளங்குகிறார். அடுத்தடுத்து டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையும் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதனால் காயம் ஏற்படுவதற்கான சூழலை தவிர்த்து, பும்ரா உலகக் கோப்பைகளில் பங்கேற்பதை உறுதி செய்ய, டெஸ்ட் போட்டிகளில் இருந்து பும்ரா பிசிசிஐ மூலம் வெளியேற்றப்படலாம் என கருதப்படுகிறது.

Read Entire Article