ஜனநாயகன்

KVN தயாரிப்பு நிறுவனம் சார்பாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜன நாயகன்‘. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், விஜய்யுடன், பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன், இயக்குநர் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9-ம் தேதி, அதாவது ரசிகர்களுக்கு பொங்கல் பரிசா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம், தமிழ் புத்தாண்டில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் படத்தின் விநியோக உரிமையை Seven Screens Studio நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் ஃபிலிம் நிறுவனம் ரூ.78 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து விநியோக உரிமைகளும் விற்கப்பட்டுவிஇந்த நிலையில், கடும் போட்டிகளுக்கிடையே, ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் கூலி படத்தை ஒரு கோடியில் மிஞ்சிய விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. கூலி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை ரூ 120 கோடிக்கும் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. கமலின் தக் லைஃப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகப்படியாக 150 கோடிக்கு வாங்கியது. தக் லைஃப் தொடர்ந்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக கூலி படம் இருந்த நிலையில் தற்போது ஜன நாயகன் திரைப்படம் கூலி படத்தை விட 1 கோடி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கமலின் தக் லைஃப் படம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தமிழ் படமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.