ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வியாபாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. படத்தின் ஓவர்சீஸ் உரிமைகள் ரூ.47.5 கோடிக்கும், ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கும் விற்பனையாகியுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முதல் பாகத்தின் நடிகர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கவனமீர்க்காத அனிருத் இசை

இதற்கிடையே, இப்படத்திலிருந்து வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் பாகத்தின் பாடல்களுக்கு கிடைத்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் வெளியானபோது உருவான ஹைப் மற்றும் ரசிகர்களின் வரவேற்புடன் ஒப்பிடும்போது, இரண்டாம் பாகத்தின் பாடல்கள் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சு உள்ளது. இன்று மாலை ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில் இந்த டிரெய்லர் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 ப்ரீ பிஸ்னஸ்

2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஜெயிலர் 2 திரைப்படம் சுமார் ரூ400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸூக்கு முன்பே திரையரங்க விநியோகம் மற்றும் ஓடிடி விற்பனையில் இந்த முதலீட்டை தயாரிப்பாளர் திருப்பி எடுத்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தின் ஒட்டுமொத்த ஓவர்சீஸ் உரிமைகளை ஸ்லோகா என்டர்டெயின்மெண்ட் ரூ.47.5 கோடிக்கு வாங்கியுள்ளது. அதே நேரம்  ஓடிடி உரிமையை ரூ.160 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.  குறிப்பாக, ஓடிடி சந்தை சரிவை சந்தித்து வரும் காலகட்டத்திலும் ரூ.160 கோடி விற்பனை என்பது ஒரு பெரிய தொகையாகும். சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை ரூ45 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. கேரளா விநியோக உரிமை ரூ60 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. படத்தின் சாட்டலைட் உரிமைகளை சன் நெட்வர்க் தக்கவைத்துக் கொள்ளும். படத்தின் ரிலீஸூக்கு முன்பே ஜெயிலர் 2 ரூ 500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

முன்பதிவு நிலவரம்

அமெரிக்காவில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாகவே கணிசமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. வட அமெரிக்காவில் 54 இடங்களில் 139 பிரீமியர் காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 1,527 டிக்கெட்டுகள் விற்பனையாகி, சுமார் 45,805 அமெரிக்க டாலர் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.