ITI admission 2024: ஐடிஐ நேரடி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

1 year ago 8
ARTICLE AD

விழுப்புரம்: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை  கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விழுப்புர மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள்  16.07.2024 முதல் 31.07.2024   முடிய நேரடி சேர்க்கை மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்து  அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் நேரடி சேர்க்கை.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு விபரங்கள் தெரிந்து கொள்ள  நேரடியாக சென்று அத்தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதார்கள் நேரடி சேர்க்கையில் சேரும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை,புகைப்படம் – 4 எண்கள் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை  கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை மற்றும் மிதிவண்டி, பாடப்புத்தகம், மூடுகாலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் On the Job Training – ஆனது உதவித்தொகையுடன் வழங்கப்படும்.  பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- ஐ விண்ணப்பதாரர்  நேரடியாக  அந்த அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் செலுத்த வேண்டும் நேரடி சேர்க்கைக்கு கடைசி நாள் :  31.07.2024 ஆகும்.

மேலும், விபரங்களுக்கு  9380114610, 8072217350, 9789695190  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Read Entire Article