ITBP Constable Recruitment 2024: பத்தாவது தேர்ச்சி பெற்றவரா? மாசம் ரூ.69,000 சம்பளம்; எல்லை காவல் படையில் வேலை!

1 year ago 7
ARTICLE AD

இந்தோ - திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police)  உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

கான்ஸ்டபிள் (Kitchen Services)

ஆண்கள் -697

பெண்கள் - 122

மொத்த பணியிடங்கள் - 819

ஊதிய விவரம்:

கான்ஸ்டபிள் பணிக்கு 7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்பட உள்ளது

கல்வித் தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in - என்ற லிங்க் மூலம்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.  ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவென்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://recruitment.itbpolice.nic.in/rect/statics/news  - கிளிக் செய்து காணவும்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப் பிரிவினர், ஆண்கள் ஆகியோர் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.10.2024  மாலை 5.50 மணி வரை

Read Entire Article