Iran Singer Tataloo: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தால் மரண தண்டனை: யார் இந்த பாடகர் தட்டாலு.!

11 months ago 7
ARTICLE AD

இஸ்லாமிய மதத்தின் இறைத் தூதராக அறியப்படும் முகமது நபியை அவமதித்த குற்றத்திற்காக ஈரானிய பாப் பாடகர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய பாடகருக்கு மரண தண்டனை

தட்டாலு என அழைக்கப்படும் ஈரானிய பாடகர், அவ்வப்போது அவரின் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருவது வழக்கமாக இருந்தது.  இந்நிலையில், இஸ்லாமிய இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ஈரான் அரசுத் தரப்பு அவரை விடவில்லை, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என, வழக்கை மேல்முறையீடு செய்தது.

அதைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை  உறுதி செய்தது மட்டுமன்றி,  நபியை இழிவுபடுத்தியதற்காக தட்டாலுவுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பு ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யார் இந்த தட்டாலு என்பது குறித்து பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.

🇮🇷 Iranian Musician Tataloo Sentenced to Death for "Insulting the Prophet Muhammad"

Tattoo-covered Iranian music star Amir Hossein Maghsoudloo, better known as Tataloo, has reportedly been sentenced to death by an Iranian court after being found guilty of insulting Prophet… pic.twitter.com/07A0HqmquY
— James Porrazzo (@JamesPorrazzo) January 20, 2025

யார், இந்த தட்டாலு:

தட்டாலு என்று அழைக்கப்படும் பாடகரின் உண்மையான பெயர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ. 37 வயது, ஈரானிய இசைக்கலைஞரான, இவர், ராப்- பாப்  ஆகிய பாடல்கள் பாடுவதன் மூலம் பிரபலமானார். இவர், உடலில் அதிக அளவில் பச்சை குத்தியிருப்பதன் காரணமாக தட்டாலு என்றும் அழைக்கப்படுகிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போது, அவருக்கு எதிராக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து தட்டாலூ பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே விபச்சாரத்தை ஊக்குவித்ததற்காகவும், ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காகவும், நாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காகவும் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இவர் 2018 முதல் துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் வசித்து வந்தார். இருப்பினும், டிசம்பர் 2023 இல், துருக்கிய அதிகாரிகள் அவரை ஈரானிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தற்போது வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பானது வழங்கப்பட்டிருப்பது , பெரிதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த தீர்ப்பானது இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த செய்தியானது உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

Read Entire Article