IPL Auction Dates: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வீரர்களுக்கான, மெகா ஏலம் நடைபெறும் தேதியைபிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் தேதி அறிவிப்பு

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் இந்த ஏலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க சர்வதேச அளவில் இருந்து மொத்தம் ஆயிரத்து 574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில், ஆயிரத்து 165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே 10 அணிகள் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.